உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் - திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

Published On 2022-08-27 08:41 GMT   |   Update On 2022-08-27 08:41 GMT
  • விசர்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும்.

திருப்பூர் :

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் இடங்களில்சிலைகள் நிறுவுவதற்கு கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகளை மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் இடங்களில் சிலைகள் நிறுவுவதற்கு கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து 9.8.2018 நாளிட்ட பொது (சட்டம்(ம) ஒழுங்கு -B) துறையால் வெளியிடப்பட்ட அரசாணையின் படி தொடர்புடைய துறைகளில் பெறப்பட வேண்டிய ஆட்சேபணையின்மை கடிதத்துடன் மாநகர பகுதிகளில் அந்தந்த உதவி காவல் ஆணையர்களிடமும், ஊரக பகுதிகளில் அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்களிடமும் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்ற பின்னர் சிலைகள் நிறுவப்பட வேண்டும். மேலும் நிறுவப்படும் சிலைகள் களிமண்ணால் ஆனதாகவும், இயற்கை வண்ணக் கலவை கொண்டு வண்ணம் பூசப்பட்டவைகள் மட்டும் இருந்திட வேண்டும்.

எனவே, விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் பொதுமக்கள் அமைப்பினர்கள் உரிய படிவத்தினை தொடர்புடைய காவல் உதவி ஆணையர் அலுவலகங்கள், மற்றும் ஊரக பகுதிகளில் அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகங்களிலும் பெற்று உரிய முறையில் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்று சிலைகள் நிறுவிட வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலைகள் வைத்து வழிபட அளிக்கப்படும் விண்ணப்பம் வருவாய் கோட்டாட்சியர் - உதவி காவல் ஆணையர்களால் நிராகரிப்பு செய்யப்படும் இடங்களில் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை முறையே திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள்- அமைப்புகளால் நிறுவப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் கீழ்கண்ட இடங்களில் விசர்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1. சாமளாபுரம் குளம்.2. ஆண்டிபாளையம், பி.ஏ.பி வாய்க்கால்.3. பொங்கலூர்,பி.ஏ.பி வாய்க்கால். 4. எஸ்.விபுரம், பி.ஏ.பி வாய்க்கால். 5. கெடிமேடு, பி.ஏ.பி வாய்க்கால். 6. எஸ்.வி.புரம் வாய்க்கால்.7. கணியூர், அமராவதி ஆறு.எனவே மேற்கண்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யவும், மேலும் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் பொருட்டு எடுத்துச் செல்லுமாறும் பொதுமக்கள்- அமைப்புகள் ஆகியோர்களுக்கு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News