உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விஷ சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

Published On 2023-05-16 06:56 GMT   |   Update On 2023-05-16 06:56 GMT
  • விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 17 பேர் பலியானார்கள்.
  • மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் :

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 17 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய தடுப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். சேவூர், ராயர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது.

திருப்–பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர மதுவிலக்கு போலீசார் விஷசாராயம், வெளிமாநில மதுபானங்கள், கள், கஞ்சா உள்ளிட்டவை தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். மாநகர பகுதியில் வெளிமாநில மதுவிற்பனை தொடர்பாக ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதுதொடர்பான புகார்களை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை 94437 81474 என்ற எண்ணிலும், திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை 94981 75139 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News