உள்ளூர் செய்திகள்

அருளாளப் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

Published On 2023-10-15 11:06 GMT   |   Update On 2023-10-15 11:06 GMT
  • இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமையான கோவிலாகும்.
  • மாதம்தோறும் அமாவாசை பூஜை மதியம் 12 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் நடைபெறுகிறது. அன்னதானமும் நடக்கிறது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா குள்ளாயூர் கிராமத்தில் அருளாளப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அருளாளப்பெருமாள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இந்த கோவிலில் தினமும் காலை 7.30 மணிக்கு ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமையான கோவிலாகும்.

ஒவ்வொரு அணைப்பகுதியிலும் ஒரு கோவில் என்ற சோழர்கால கோட்பாட்டின்படி காளியாத்தாள் கோவில் அணையை மையப்படுத்தி நொய்யல் ஆற்றின் தென்புறம் சிவன்கோவிலும், வடபுரம் பெருமாள் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு சோழ மன்னர்கள் தானம் வழங்கிய குறிப்புகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. இந்த கோவிலில் மாதம்தோறும் அமாவாசை பூஜை மதியம் 12 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் நடைபெறுகிறது. அன்னதானமும் நடக்கிறது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. புரட்டாசி அமாவாசை தினத்தன்று பந்தசேவை பகல் 12 மணிக்கு மிக சிறப்பாக நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு தொடர்ச்சியாக 10 சனிக்கிழமைகளில் வந்து மனதார வேண்டுபவர்களுக்கு திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நீண்டநாள் நம்பிக்கையாக இருக்கிறது.

Tags:    

Similar News