உடுமலை அருகே ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
- வெற்றி பெறுபவர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பரிசாக 10 கிராம் வெள்ளி வழங்கப்பட உள்ளது
- இலக்கை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது.
உடுமலை:
முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலையை அடுத்துள்ள குருவப்பநாயக்கனூரில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் இலக்கை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது.
போட்டிகள் குறித்து திமுக., மாவட்ட அவைத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., இரா. ஜெயராமகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதியில் இந்த ஆண்டு முழுவதும் ரேக்ளா பந்தயம் நடைபெறும்.
இதில் 18 வினாடிகளுக்குள் வரும் மாட்டு வண்டி வீரர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பரிசாக 10 கிராம் வெள்ளி வழங்கப்பட உள்ளது என்றார்.