உள்ளூர் செய்திகள்

திருப்பூர் ரெயில் நிலையத்திலுள்ள எஸ்கலேட்டர். 

திருப்பூர் ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Published On 2022-09-10 11:27 GMT   |   Update On 2022-09-10 11:27 GMT
  • ரெயில் நிலையத்திற்கு பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
  • 70 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது.

திருப்பூர் :

திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றது.

குறிப்பாக கூடுதல் இருக்கைகள்அமைக்கப்பட்டும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டும் வந்தது. இதில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் நடைபெற்றது. எஸ்கலேட்டர் பணி ஏறத்தாழ 70 சதவீதபணிகள் நிறைவடைந்து விட்டது, ஆனால் கடந்த சில மாதங்களாகவே அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது . ஒரு பிளாட்பார்மில் இருந்து மறு பிளாட்பார்மிற்கு செல்ல நடை மேம்பாலம் மற்றும் மின் தூக்கியை(லிப்ட்) பயணிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் லிப்ட அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் ெரயில் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கியும் நடை மேம்பாலத்தை பயன்படுத்தியும் மறு பிளாட்பார்மிற்கு சென்று வந்தனர். எனவே பயணிகள் சிரமத்தை போக்க விரைவில் எஸ்கலேட்டர் பணிகளை முடித்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News