உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

திருமுருகன்பூண்டி நகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு

Published On 2023-05-25 07:55 GMT   |   Update On 2023-05-25 07:55 GMT
  • 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
  • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

அவினாசி :

திருமுருகன்பூண்டி நகராட்சி 4, 5, 8, 9 வாா்டுகளுக்கு உள்பட்ட துரைசாமி நகா், துரைசாமி நகா் விரிவாக்கம், விநாயகா காா்டன், விநாயகா காா்டன் விரிவாக்கம், தன்வா்ஷினி நகா், முல்லை நகா், மகாலட்சுமி காா்டன், எம்ஜிஆா் நகா், என்எஸ் பி நகா், ஏவிபி லட்சுமி அம்மாள் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.இப்பகுதி மக்களுக்கு தொடா்ந்து 6 மாதங்களாக 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

இந்தநிலையில் 25 நாட்களுக்கு மேலாகியும் குடிநீா் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது,3 நாட்களுக்குள் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் அப்துல் ஹாரிஸ், நகர மன்றத் தலைவா் குமாா் ஆகியோா் உறுதியளித்தனா். 3 நாட்களுக்குள் குடிநீா் பிரச்சனைக்குத் தீா்வு ஏற்படாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Tags:    

Similar News