தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு, நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்கலாம்.
திருப்பூர் :
தமிழ் இலக்கிய வாசிப்பில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு, நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்கலாம்.இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 1,500 பேருக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதில் 50 சதவீத இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், மீதமுள்ள 50 சதவீத இடங்களில், அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். இத்தேர்வு வரும் அக்ேடாபர் மாதம் 1ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க 22ந் தேதி முதல் வரும் செப்டம்பர் 9ந் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி மாணவர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.