உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வசூலித்த பணத்தை மாணவர்களிடம் திரும்ப ஒப்படைத்த பள்ளி

Published On 2023-05-17 08:09 GMT   |   Update On 2023-05-17 08:09 GMT
  • 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
  • மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது.

அவினாசி :

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. 1000 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது. அப்போது, சான்றிதழ்களை வழங்க பணம் வசூல் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.

இதுகுறித்து பள்ளி நிா்வாகத்திடம் கேட்டபோது, சேவூா் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால் தனியாா் கடைகளில் சான்றிதழ்களை கலா் ஜெராக்ஸ் எடுப்பதற்காக மட்டுமே மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.100 வாங்கினோம். 25 மாணவா்கள் மட்டுமே சான்றிதழ் வாங்க வந்திருந்தனா். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதை அடுத்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்தனா். பின்னா் அதிகாரிகள் கூறியபடி மாணவா்களிடம் பெறப்பட்ட ரூ.100-ஐ அவா்களிடம் திரும்ப வழங்கி வருகிறோம் என்றனா்.

Tags:    

Similar News