உயிரிழந்த பகுதி நேர ஆசிரியா்களின் குடும்பங்களுக்குநிவாரண உதவி வழங்க வேண்டும் சிறப்பாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தல்
- 3 நாள்களில் 4 பகுதிநேர ஆசிரியா்கள் உயிரிழந்துள்ளனா்
- தலா ரூ.10 லட்சம் வழங்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது
திருப்பூர் :
உயிரிழந்த பகுதிநேர ஆசிரியா்களின் குடும்பங்க ளுக்கு முதல்வா் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட ஒருங்கி ணைப்பாளா் கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் கடந்த மே 10 -ந் தேதி முதல் மே 12 ந் தேதி வரையில் 3 நாள்களில் 4 பகுதிநேர ஆசிரியா்கள் உயிரிழந்துள்ளனா். இதில், கரூரைச் சோ்ந்த பிரதாப் என்ற பகுதி நேர கணினி ஆசிரியா் சாலையோரத்தில் நின்று டீ அருந்திக் கொண்டி ருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2012 ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக மாதம் ரூ.10 ஆயிரம் என்ற குறைந்த ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பகுதிநேர ஆசிரியா்கள் இறந்தால் தற்காலிக ஊழியா்கள் என்பதால் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் எந்தவிதமான நிதியுதவியும் வழங்கு வதில்லை. இந்த நிலையில் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் குடும்ப ங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆகவே, அரசு துறையில் பணியாற்றி மாணவா்களின் தனித் திறமையை உயா்த்திய உயிரிழந்த பல பகுதிநேர ஆசிரியா்களின் குடும்பங்களுக்கும் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.