உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி. கார்த்திகேயன்.

பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

Published On 2022-09-15 10:09 GMT   |   Update On 2022-09-15 10:09 GMT
  • கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை
  • எஸ்.பி. எச்சரிக்கை

செங்கம்:

செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செங்கம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது எஸ்.பி. கார்த்திகேயன் பேசுகையில்:-

பள்ளி மாணவர்கள் பள்ளி பருவத்தில் தேவையில்லாத சமூக வலைதளங்கள் மற்றும் போதை வஸ்து போன்ற பழக்கங்களுக்கு உள்ளாக கூடாது என்றும், கஞ்சா உள்பட போதை பொருட்கள் பயன்படுத்தும் சகமாணவர்கள் அல்லது பயன்படுத்த வற்புறுத்தும் மாணவர்கள் குறித்த தகவலை எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்களிடமும் அல்லது போலீசாரிடம் தெரிவிக்கலாம்.

வருங்காலம் இந்தியா மாணவர்கள் கையில் தான் உள்ளது, மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையில் படித்து முன்னேறி தங்களது பங்களிப்பை இந்திய நாட்டிற்கு அளிக்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சின்னராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமரன், தலைமை ஆசிரியர் காமத், கவுன்சிலர் முருகமணி உள்பட ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-

கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக தனி படைகள் அமைக்கப்பட்டு+ செயல்பட்டு வருவதாகவும், கஞ்சா விற்பனை செய்து சிறைக்கு சென்று திரும்பியவர்கள், பிணையில் வெளிவந்தவர்கள் உள்ளிட்டோர் குறித்த பதிவேடுகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இனிவரும் காலங்களில் போதை பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க தேவையான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை போலீசாருக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.

கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றார்.

Tags:    

Similar News