உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை முன்பு டாஸ்மாக் ஊழியர் உடலுடன் உறவினர்கள் மறியல்

Published On 2022-12-28 09:00 GMT   |   Update On 2022-12-28 09:00 GMT
  • சாவில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு
  • கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை:

கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் மேக்களூர் டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.

பைக்ககள் மோதி விபத்து

நேற்று மாலை திருவண்ணாமலைக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். சோமாசிபாடி அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது இவரது பைக் மோதியது. இதில் ராஜேந்திரனுக் எதிரே வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ராஜேந்திரனை அந்த வழி யாக காரில் வந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் காரில் வந்த வர்களுக்கும், ராஜேந்திரனுக் கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

காரை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனையின் அருகில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜேந்தி ரனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

அப்போது பிரேத பரிசோதனை அறை அருகில் காரில் ராஜேந்திரன் உடல் இருந்ததை கண்ட அவர்கள் காரில் வந்தவர்களிடம் முன்விரோ தம் காரணமாக வேண்டும் என்றே கால தாமதமாக கொண்டுவந்து கொன்றுவிட் டதாக கூறி காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.

போலீசார் சம்பவ இடத் திற்கு வருவதற்குள் காரில் வந்தவர்களை அவர்கள் தாக் கியதால் பரபரப்பு ஏற்பட் டது. அப்போது வந்த போலீ சார் அவர்களை மீட்டு சிகிச் சைக்காசுமருத்து வமனையில் சேர்த்தனர். இதனிடையே ராஜேந்திரனின் உடலுடன் காரை மருதுவமனைக்கு முன்பு எடுத்து வந்து புறவழிச்சாலையில் நடு வில் நிறுத்தினர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையி லான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது ராஜேந்திரனில் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறினர். எழுத்து பூர்வ மாக புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்த னர்.

போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங் கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News