உள்ளூர் செய்திகள்

குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அதிகாரிகளுடன் ஆலோசனை

Published On 2023-03-29 10:32 GMT   |   Update On 2023-03-29 10:32 GMT
  • காரைக்குடி மையத்தில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
  • டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

சென்னை:

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் குரூப்-4 நில அளவையாளர் பதவிக்கு நடத்திய தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றனர்.

காரைக்குடி மையத்தில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். ஒரே மையத்தில் 700 பேர் தேர்வானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியதோடு முறைகேடு நடந்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். தலைவர் முனியராஜன் (பொறுப்பு), உறுப்பினர்களுடன் பாரிமுனையில் உள்ள அலுவவலகத்தில் விவாதித்தார்.

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News