கடலூர் குப்பன்குளத்தில் வீடுகளை இடித்து காலி செய்த மக்களுக்குஅடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
- குப்பன்குளம் பகுதி யில் சாலை ஓரத்தில் வீடு கட்டி 7 குடும்பத்தினர்கள் வசித்து வந்தனர்.
- தற்போது வீடு கள் இடித்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப் புலியூர் குப்பன்குளம் பகுதி யில் சாலை ஓரத்தில் வீடு கட்டி 7 குடும்பத்தினர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஆக்கிர மித்து வீடு கட்டி இருப்பதை அகற்ற வேண்டும் என நீதி மன்ற உத்தரவின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் பொக் லைன் எந்திரம் மூலம் வீடு களை இடித்து காலி செய்த னர். இந்த நிலை யில் இன்று காலை பாதிக்கப் பட்ட மக்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வக்கீல் அறிவுடை நம்பி, அ.தி.மு.க. நாக ராஜன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் திருப்பாதிரிப் புலியூர் குப்பன்குளம் சாலை ஓரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தோம். தற்போது மாநகராட்சி சார்பில் நாங்கள் இருந்து வந்த வீடுகளை இடித்து காலி செய்தனர். இந்த நிலையில் எங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் மாற்று இடம் வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் உத்தரவாதம் அளிக்கப் பட்டது. தற்போது வீடு கள் இடித்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எங்களுக்கு வேறு எங்கும் இடம் இல்லாததால் அதே பகுதியில் வசித்து வரக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஆகையால் எங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.