நாமக்கல்லில் நாளைஉயர் கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
- ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எம்.எம்.டி மற்றும் நர்ச்சர் என்ற தன்னார்வ இயக்கம் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்தும், அப்படிப்பினை படிக்க ஏதுவாக உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எம்.எம்.டி மற்றும் நர்ச்சர் என்ற தன்னார்வ இயக்கம் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி, நாளை 27-ந் தேதி மாலை 3 மணிக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.