உள்ளூர் செய்திகள்

மேகமலை அருவியில் நீராடிய சுற்றுலா பயணிகள்.


ஆடிப்பிறப்பை முன்னிட்டு மேகமலை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published On 2022-07-18 07:10 GMT   |   Update On 2022-07-18 07:10 GMT
  • தேனி மாவட்டம் மேகமலை அருவியில் ஆடிப்பிறப்பை முன்னிட்டு மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
  • ஆடி பிறப்பு, அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

வருசநாடு:

ஆடிப்பிறப்பை முன்னிட்டு மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்ததால் கூட்டம் அலைமோதியது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் இருந்து 15கிமீ. தூரத்தில் மேகமலை அமைந்துள்ளது. மேகமலையில்இருந்து வரும் மழை மற்றும் ஊற்றுநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது. பொதுவாக இந்த மாதம் நீர்வரத்து இருப்பதில்லை. ஆனால் மேகமலையில் பெய்து வரும் மழையினால் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வனப்பகுதியில் அமை ந்துள்ள இந்த அருவிக்கு ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாபயணி கள் அதிகளவில் வருவது வழக்கம்.

நேற்று ஆடிப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் அருவிக்கு வந்து நீராடினர். இதனால் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. தலை ஆடிக்கு விருந்துக்கு அழைக்கப்பட்ட புதுமண தம்பதியினரும் அருவியில் நீராடி ஆனந்தமாக பொழுதை கழித்து சென்ற னர். இருப்பினும் பெண்கள் தனியே குளிக்கும் வசதி இல்லாததால் சிரமப்ப–ட்டனர். மேலும் உடை மாற்றும் அறையும் இல்லை.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், குளிப்பதற்காக வனத்துறை சார்பில் ரூ.30 கட்டணம் பெறப்படுகிறது. ஆனால் உரிய வசதி இல்லை. வனத்துறையினரும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிப்பதில்லை. ஆடி மாதத்தில் கிராமங்களில் இறைச்சி விருந்து, புதுமணத்தம்பதியர் அழைப்பு என்று களை–கட்டும். எனவேஇம்மாதம் முழுவதும் அருவிக்கு வர பலரும் ஆர்வம் காட்டுவர். எனவே பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News