உள்ளூர் செய்திகள்

கடலில் குளித்தவர்களை போலீசார் எச்சரித்த காட்சி.

காரைக்கால் கடற்கரையில் குவிந்த சுற்றுலாபயணிகள்: கடலில் குளிக்கவிடாமல் அப்புறப்படுத்தியத்திய போலீசார்

Published On 2023-04-10 08:08 GMT   |   Update On 2023-04-10 08:08 GMT
  • பலர் பூங்கா, கடற்கரை மணலில் பொழுதை போக்கினாலும், சிலர், கடலின் ஆழம் தெரியாமல் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்
  • மதிய வேளையில், போலீசாருக்கு தெரியாமல் வெயிலின் தாக்கத்தை தணிக்க பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

தொடர் விடுமுறை காரணமாக, காரைக்கால் மாவட்ட ஆன்மீக தலங்கள், கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. இவர்களில் பலர் பூங்கா, கடற்கரை மணலில் பொழுதை போக்கினாலும், சிலர், கடலின் ஆழம் தெரியாமல் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர். அண்மைக்காலமாக, காரைக்கால் கடலில் குளித்து, கடல் அலையில் சிக்கி பலர் இறந்துள்ளனர். இதன்காரணமாக, கடலில் குளிப்பதை போலீசார் அனுமதிப்பதில்லை. மதிய வேளையில், போலீசாருக்கு தெரியாமல் வெயிலின் தாக்கத்தை தணிக்க பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர். நேற்று மாலை திரளான மக்கள் கூட்டம் கடலில் இறங்கி குளிப்பதை பார்த்த போலீசார், அவர்களிடம் கடலின் ஆழம் குறித்து எடுத்துகூறி,குளிக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தினர். போலீசாரின் அறி வுறுத்தலை பெரிதுபடுத்தாத சிலர், போலீசார் இல்லாத இடமாக பார்த்து குளிக்கத் தொடங்கினர்.

இதனால், பொறுமை இழந்த போலீசார், கடலில் இறங்கி, குளிப்பவர்களை அப்புறப்படுத்தினர். கடல் ஆழம் என்றால் குறிப்பிட்ட தூரம் தடுப்பு வேலி அமைத்து, ஆழம் இல்லாத கரையில் குளிக்க போலீசார் அனுமதிக்கவேண்டும். வெயில் காலம் என்பதால் கடல் குளியல் அவசியம். இதை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

Tags:    

Similar News