உள்ளூர் செய்திகள்
நத்தம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
- இதன்வழியாக செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 2 கி.மீ தொலைவுக்கு சுற்றுப்பாதை யில் இயக்கப்பட்டன
- தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் நத்தத்தில் இருந்து சேர்வீடு கிராமத்திற்கு செல்லும் மக்களின் வசதிக்காக 4 வழிச்சாலையில் சுரங்க ப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் இந்த சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்வழியாக செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 2 கி.மீ தொலைவுக்கு சுற்றுப்பாதை யில் இயக்கப்பட்டன. இதனிடையே சுற்றுப்பாதை யில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், எதிர்கால த்தில் தண்ணீர் தேங்காத வாறு வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.