உள்ளூர் செய்திகள்

ஸ்விக்கி, சுமோட்டா உணவு டெலிவரி ஊழியர்களுக்கு போக்குவரத்து போலீசார் கடிவாளம்

Published On 2023-07-29 08:47 GMT   |   Update On 2023-07-29 08:47 GMT
  • செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக செல்லக்கூடாது.
  • விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை:

சென்னையில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 6 மாதங்களில் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

இருப்பினும் சென்னை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதன்படி முக்கிய இடங்களில் போக்குவரத்து உதவி கமிஷனர்களின் தலைமையில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்றவை ஓட்டுனர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

600 உணவு விநியோக ஓட்டுனர்களுக்கு முறையற்ற வகையில் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் ஒரு வழிபாதையில் பயணம் செய்யக்கூடாது, செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்து போலீசார் கடிவாளம் போட்டுள்ளனர்.

இந்த விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News