தஞ்சையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை குறித்து பயிற்சி முகாம்
- விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை வர்த்தக முறை செயலாக்கத்தில் உள்ளது.
- தொழில்நுட்ப அலுவலர்களுக்கு கடந்த 18-ந்தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம் மற்றும் பூதலூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் பண்ணை அளவிலான வர்த்தக முறை செயலாக்கத்தில் உள்ளது.
இத்திட்டத்தின் செயல்பாடுகளை வேளாண்மை உற்பத்தி ஆணையர்/ அரசு செயலர் மற்றும் இயக்குநர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினரின் அறிவுரையின்படி வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களும் தெரிந்து கொண்டு விவசாயிகளுக்கு உதவிட ஏதுவாக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை தொழில்நுட்ப அலுவலர்களுக்கு கடந்த 18-ந்தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு வேளாண்மை துனண இயக்குநர்(மத்திய திட்டங்கள்) ஈஸ்வர் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை) கோமதி தங்கம், வேளாண்மை துனண இயக்குநர்(உழவர் பயிற்சி நிலையம்) பால சரஸ்வதி வேளாண்மை துணை இயக்குநர் ( வேளாண் வணிகம்) வித்யா, தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலை துனண இயக்குநர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மின்னணு வேளாண் சந்தை மாநில ஒருங்கினணப்பாளர் திரு. பிரேம் குமார் இத்திட்டத்தின் செயல்பாடுகளான விவசாயிகள் தரவுகளை பதிவேற்றம் செய்தல், வணிகர்களுக்கான உரிமம், ஏல முறை மற்றும் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை குறித்து பயிற்சி அளித்தார்.