உள்ளூர் செய்திகள்

ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடைபெற்ற போது எடுத்த படம்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை

Published On 2023-04-02 09:08 GMT   |   Update On 2023-04-02 09:08 GMT
  • மாணவர்களுக்கு கேமராவின் வகைகள், செயல்பாடு மற்றும் நுட்பங்கள் சார்ந்த பயிற்சியை பாலமுருகன் வழங்கினார்.
  • திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றி விளக்கினார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவு மற்றும் போட்டோகிராபி கிளப் சார்பில் "புகைப்பட கலையின் நுணுக்கங்கள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். போட்டோகிராபி கிளப் இயக்குனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகதர மதிப்பீட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி பிக்ஸ்டாக்ல்க் போட்டோகிராபி கிளப்பின் தலைவர் பாலமுருகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கேமராவின் வகைகள், செயல்பாடு மற்றும் நுட்பங்கள் சார்ந்த பயிற்சியை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி நூலகர் முத்துகிருஷ்ணன், பேராசிரியர்கள் லிங்கத்துரை, லோக்கிருபாகர், மணிகண்ட ராஜா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்கள், போட்டோகிராபி கிளப் மாணவ உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி பட்டறையின் முடிவில் போட்டோகிராபி கிளப் மாணவ செயலாளர் புரோசேகர் நன்றி கூறினார்.ஆதித்தனார் கல்லூரியில் முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனையின் பெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ஈரோட்டை சேர்ந்த உளவியல் மருத்துவர் அசோக், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே "இன்றைய சூழலில் கல்லூரி மாணவிகள் எதிர்கொள்ளும் பாலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகள்" குறித்தும், அவற்றை மேற்கொண்டு சிறப்புற வாழும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றி தன் அனுபவங்கள் மூலம் விளக்கினார். முடிவில் 2-ம் ஆண்டு முதுகலை ஆங்கில மாணவி லிபியா நாராயணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News