திருச்சி மாவட்டத்தில் நீர்நிலை சார்ந்த 15 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு
- திருச்சி மாவட்டத்தில் நீர்நிலை சார்ந்த 15 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது
- வனத்துறையினருடன் கைகோர்த்த தன்னார்வலர்கள், மாணவர்கள்
திருச்சி:
தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் மற்றும் நிலம் சார்ந்த பகுதிகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இதன் மூலம் அரியவகை பறவை யினங்கள் வருகை குறித்த தகவல்கள் வெளியாகும். இந்த பறவைகள் இயற்கை சூழலுக்கு ஏற்ப வருகை தரு–கின்றன. திருச்சி மாவட்டத்தில் உள்ள வனசரக அலுவ–லகங்களுக்கு உட்பட்ட 15 ஈர நிலங்களில் இரண்டு நாட்கள் பறவைகள் கணக் கெடுப்புப் பணி நடை–பெறுகிறது.
பல்வேறு வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து இனபெருக்கத்திற்காக பற–வைகள் திருச்சி மாவட்டத்திற்கு வருடம் தோறும் பறந்து வருகின்றன. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான செப்டம்பர் மாதத்திலும், வடகிழக்கு பருவமழை முடிவடையும் கால கட்டத்திலும் பற–வைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். தற்போது வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துள்ள நிலையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட உதவி வனப்பாது காவலர் சம்பத்குமார் கூறியதாவது:- இதில் திருச்சி மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு, தாய–னூர், கள்ளிக்குடி, பூங்குடி, கூத்தைப்பார் பெரிய ஏரி, அரசங்குடி ஏரி, கிருஷ்ணசமுத்திரம், கிளியூர், வாழவந்தான் கோட்டை, துவாக்குடி ஏரி, பூலாங்குடி, மாவடிக்குளம், குண்டூர், ஆலத்துடையான்பட்டி, கீரம்பூர், துறையூர், சிக்கத் தம்பூர் ஆகிய பகுதிகளில் இன்று பறவைகள் கணக்கெ–டுக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த பணிக–ளுக்காக தலா 5 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் வனத்துறையினருடன் தன்னார்வலர்கள், பொது–மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்துள்ளனர். வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு பகுதி–யில் மட்டும் 45 வகையான பறவையினங்கள் கண்டறி–யப்பட்டு உள்ளன. அவற்றில் உள்ளூர் பற–வைகள் 50 சதவீதமும், வெளிநாட்டு பறவைகள் 50 சதவீதமும் இடம் பெற்றுள்ளன. சைபீரியா நாட்டில் இருந்து நத்தைக்குத்தி நாரை, பெலிக்கான் ஆகிய பறவைகள் அதிகம் வந்துள்ளன. அவை இங்குள்ள இயற்கை சூழல், உணவு ஆகியவற்றை நாடி வந்துள்ளது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் வருகை தரும் பறவைகள் ஜனவரி மாத இறுதியில் புறப்பட்டு செல்லும். இதேபோல் மலைப்பகு–தியில் பறவைகள் கணக்கெ–டுக்கும் பணியானது வருகிற மார்ச் மாதம் 4 மற்றும் 5-ந்தேதிகளில் நடைபெறும் என்றார். முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் ஜான்சிராணி, பாரஸ்டர்கள் தாமாதரன், திவ்யா ஆகியோர் கலந்து–கொண்டனர்.