உள்ளூர் செய்திகள்

ஆறுநாட்டு வேளாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Published On 2022-09-10 09:35 GMT   |   Update On 2022-09-10 09:35 GMT
  • ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க 26-வது மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்
  • தமிழ்நாட்டின் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட இந்திரா கணேசன் கல்வி குழும செயலாளர் ராஜசேகரை கெளரவித்தனர்

திருச்சி:

ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க 26-வது மகாசபையில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சி திருவானைக்கோவில் தலைமை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சி.செந்தில்குமார் இறைவணக்கம் பாடினார். விழாவிற்கு ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். டி.ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.

நிர்வாகிகள் பெரியசாமி, சுப்பையாபிள்ளை, தேவராஜன், ராஜசேகரன், லோகநாதன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மங்கள் அண்டு மங்கள் உரிமையாளர் பி.மூக்கப்பிள்ளை புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக சிவானி கல்லூரி சேர்மன் டாக்டர் பி.செல்வராஜ், உபதலைவராக டி.சாத்தனூர் பி.புரவி, செயலாளராக ஆலம்பட்டி என்ஜினீயர் சதீஸ்வரன், பொருளாளராக புத்தனாம்பட்டி செந்தில்குமார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களிடம் பொறுப்புகளை மூக்கப்பிள்ளை ஒப்படைத்து தலைவருக்கு செங்கோல் கொடுத்து கௌரவித்தார்.

தமிழ்நாட்டின் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட இந்திரா கணேசன் கல்வி குழும செயலாளர் ராஜசேகரை கெளரவித்தனர். புதிதாக தலைவராக பதவியேற்றக் கொண்ட சிவானி கல்லூரி சேர்மன் டாக்டர் பி.செல்வராஜ் ஏற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் இலங்கை புஷ்பநாதன், மூர்த்தி, நாமக்கல் செல்வராஜ், பெங்களூர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சண்முகசுந்தரம், முசிறி ரமேஷ்பாபு, வி.சிதம்பரம், செந்தில் (எ) சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வாழ்த்துரை வழங்கினார்கள்.

முடிவில் துணைத்தலைவர் புரவி நன்றி கூறினார்.

Tags:    

Similar News