திருச்சியில் கற்கால கருவிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு
- திருச்சியில் கற்கால கருவிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நடந்தது
- தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
திருச்சி:
திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் மற்றும் புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் கற்கால கருவிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவ–னத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். புத் தூர் கிளை நூலக நூலகர் நாகராஜன் வரவேற்றார்.வரலாற்றுத்துறை மாண–வர் அரிஸ்டோ, கற்கால கருவிகள் குறித்து பேசு–கையில், தமிழகத்தில் கற் காலம் என்பது சுமார் கி.மு. 1,000 வரை நீடித்த காலமாகும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகள், மேற்பரப் பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றின் காலங்கள் நிர்ணயிக்கப்பட் டுள்ளன.தமிழகத்தில் கல்லாயுதங் கள் செய்யும் தொழிற்பட்ட–றைகளும், வாழ்விடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கற்காலத்தில் கைக்கோட–ரிகள், உளிகள், கத்தி–கள் மற்றும் சிறிய கற்கருவி–களை அதிகம் பயன்படுத்தி–யுள்ளனர். கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ள கல் லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரிய வருகிறது.மேலும் பண்டைய மக் களின் கல்திட்டைகள், கல் வட்டங்கள் முதலியனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள் ளன. இத்தகைய கண்டு–பிடிப்புகளால், தமிழ்நாட் டில் பழைய கற்கால மக்கள் பரவி வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது. பழைய கற்கால மக்கள் உணவைத்தேடி அலையும் நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டுள் ள–னர். கற்கால கருவிகள் மூலம் கால நிலை மாறுபாட் டினையும் மனித வளர்ச்சி நிலையினையும் உணரலாம்.பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம் குறித்து பல்வேறு நூல்கள் மூலம் அனைவரும் படித்து அறியலாம் என்றார். நாண–யங்கள், பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் ரமேஷ், லட்சுமி நாராயணன், சந் திரசேகரன், முகமது சுபேர் உட்பட பலர் கலந்து கொண் டனர். இதல் செயலர் குண–சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடி–வில் பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.