உள்ளூர் செய்திகள்

பட்டதாரி இளம்பெண் மாயம்

Published On 2023-05-14 07:47 GMT   |   Update On 2023-05-14 07:47 GMT
  • வேலை தேடி சென்னை சென்றவர் மாயமானார்
  • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

திருச்சி,

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி ராஜேஸ் வரி. இவரின் சகோதரி மணிமேகலை (வயது 41 )பி.எஸ்சி. கணினி அறிவியல் பட்டப்படிப்பு முடித்துள்ள இவருக்கும் பாண்டிராஜ் என்பவருக்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திரு–மணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் மணிமேகலை தனது சகோதரி ராஜேஸ்வரி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு புறப்பட்டு செல்வதாக சகோதரியிடம் கூறிச் சென்றார்.ஆனால் அதன் பின்னர் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் என்நத முன்னேற்றமும் இல்லை. இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி நவல்பட்டு போலீசில் புகார் செய்தார். அதில் மாயமா ன தனது மணிமேகலையை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார்.அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணிமேகலை தானாக எங்கவாது சென்றாரா அல்லது யாராவது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல் வேறு கோணங்களில் விசா–ரணையை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News