உள்ளூர் செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திரிபுர சம்ஹாரம்  ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான 

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திரிபுர சம்ஹாரம் என்ற முப்புரம் எரித்தல் ஐதீக நிகழ்ச்சி

Published On 2023-06-02 08:31 GMT   |   Update On 2023-06-02 08:31 GMT
  • மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்களின் பாதி ஆற்றலை சிவபெருமான் பெற்றார்.
  • அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார்.

கடலூர்:

இறைவன் தன் பக்தர் களை மட்டுமின்றி தன்னை வழிபடும் தேவர்களையும் முனிவர்களையும் அவ்வப் போது சோதிப்பதுண்டு. அவ்வாறு தேவர்களை சோதித்ததின் அடையாள மாகவும், வீரச்செயல் புரிந்ததின் ஆதாரமாகவும் திகழும் திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் திரிபுர சம்ஹார ஐதீக திருவிழா நேற்று இரவு நடந்தது. சிவனின் அட்ட வீரட்டத் தலங்களில் சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்ட அதிகை வீரட்டானம் பிரம்மாவை வேண்டி கடும் தவம் புரிந்து பல வரங்களை பெற்ற தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி இவர்கள் மூவரும் மூன்று பறக்கும் நகரங்களை பிரம்மாவிடம் பெற்றனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நகரங்க ளும் அருகேவரும்போது, அழியகூடியது இந்த நகரம் வரங்களைப் பெற்ற மூவ ரும், தேவர்களுக்கும் முனி வர்களுக்கும் தொல்லை கொடுத்தனர். துன்பத்தில் தவித்த தேவர்கள் சிவ பெருமானை வேண்டினர். மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்களின் பாதி ஆற்றலை சிவபெருமான் பெற்றார். பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும்வித மாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்கு மாறும் ஒரு தேரை உருவாக்க சொன்னார் சிவபெருமான். 

பூமியை பீடமாகவும், சூரிய - சந்திரர்களை சக்கர ங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால் களாகவும் கொண்டு அந்தத் தேர் உருவாக்கப் பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டை யாகவும் அமைந்தன.பிரம்மா தேரோட்டியானார். கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம்வீச, விந்தியமலை குடையானது. வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்பு நிறுத்தப்பட்ட தேரில் மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, வாயுவை வால் சிறகாக்கி, அக்னியை அதன் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார். அப்போது முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், ஒரே இடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

மூன்று அசுரர்களும் சிவ பெருமானுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார். அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்ப தால்தான், சிவபெருமானால் அசுரர் களை அழிக்க முடிகிறது. நமது சக்தியில் பாதி பலம் இல்லை என்றால் சிவபெரு மானால் சம்ஹாரம் செய்ய முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கிக் கொண்டார். மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒருநொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது.

ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லா மலேயே சிவபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர் கள் வெட்கிதலை கவிழ்ந்தனர். சிரித்து எரித்த இந்த ஐதீக நிகழ்வு வைகாசி சுவாதி தினமான நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சரநாராயண பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருள செய்துமுப்புரம் எரிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐதீக நிகழ்ச்சியை கண்டு களித்து, சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் கோவில் நிர்வாகத்தினர், பண்ருட்டி திருவதிகை நகரவாசிகள், விழாக் குழுவினர், சிவனடியார்கள் சிவ தொண்டர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News