உள்ளூர் செய்திகள்

மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்த போது எடுத்தபடம்.


தூத்துக்குடி பழைய பஸ் நிலைய புதுப்பிப்பு பணிகள் - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

Published On 2022-12-09 08:27 GMT   |   Update On 2022-12-09 08:27 GMT
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
  • தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணி மற்றும் பீட்டர் கோவில் தெருவின் அருகில் உள்ள நீர் தேங்கிய பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி மீனாட்சிபுரத்தில் உள்ள பழைய பஸ் நிலையத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் நவீன ஓய்வு அறை ஒன்றை அமைப்பற்கான இடத்தினை பார்வையிட்டு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டு ஆலோசனை வழங்கி னார்.

தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தின் உள்ளே செல்லும் பகுதிகளில் நீர் தேங்கியும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் கற்கள் மற்றும் மணல் திட்டுகள் இடையூறாக இருப்பதாக வந்த தகவலையடுத்து அதனை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு வந்த புதிய பஸ்நிலைய கடை வியாபாரிகள், ஆட்டோ ஒட்டுனர்கள், மற்றும் பொது மக்களிடம் வரும் நாட்களில் இதனை சீர்படுத்தி பேவர் கற்கள் பதிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.

தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணி மற்றும் பீட்டர் கோவில் தெருவின் அருகில் உள்ள நீர் தேங்கிய பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பிரபாகரன் ஜஸ்பர், மற்றும் மாநகர கவுன்சிலர்கள், அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News