உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் 33 சதவீத இடஒதுக்கீடு கோரி மதநல்லிணக்க ஒற்றுமை நடைபயணம்

Published On 2024-09-02 06:37 GMT   |   Update On 2024-09-02 06:45 GMT
  • நாகர்கோவிலில் மத நல்லிணக்க ஒற்றுமை நடை பயணம்.
  • விஜய் வசந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரம் வருமாறு:-

 நாகர்கோவிலில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் 33 சதவீத இடஒதுக்கீடு கோரி மத நல்லிணக்க ஒற்றுமை நடை பயணம் நடைபெற்றது. இதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


மேலும் கேசவன்புத்தன்துறை புனித மரியன்னை உயர்நிலை பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் தேவை என்ற பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டி முடித்த 2 வகுப்பறைகளை விஜய் வசந்த் நேற்று திறந்து வைத்தார்.

Tags:    

Similar News