வைகாசி விசாக திருவிழா - நெல்லை முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டமாக கடற்கரையில் திரண்டனர்.
- டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நெல்லை:
வைகாசி மாதம் பவுர்ணமி தினமான வைகாசி விசாகம் அன்று தமிழ்க்கடவுள் முருகன் அவதரித்தார். இதையொட்டி ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று முருகன் கோவில்களில் விழாக்கள் மற்றும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
சிறப்பு வழிபாடு
அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை மாவட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டமாக கடற்கரையில் திரண்டனர். தொடர்ந்து அங்கு தங்களது நேமிதங்களை நிறைவேற்றும் விதமாக கடலில் இருந்து மண் சுமந்து கோவிலுக்கு சென்றனர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.
மாநகர பகுதிகள்
இதேபோல் மாநகர பகுதி யில் உள்ள டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில், சந்திப்பு சாலை குமாரசுவாமி கோவில், பாளை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட ஏராளமான கோவில்களில் சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதல் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். அவர்கள் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்திருந்தனர்.
இதனால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. அங்கு சிவநேச செல்வர்கள் கலந்து கொள்ளும் வைகாசி விசாக சிவ பூஜை வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரு வுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம், அடியார்கள் கலந்து கொன்டனர். சந்திப்பு சாலை குமாரசுவாமி கோ விலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜை கள் நடத்தப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்ற னர்.
டவுன் நெல்லையப்பர் கோவிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று இரவு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், செப்பு தேரில் சண்முகரும், வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் விநாயகரும், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகளும் நான்கு ரத வீதியையும் சுற்றி வீதி உலா வர உள்ளனர்.