நாகர்கோவிலில் வள்ளலார் முப்பெரும் விழா - பேச்சு-கட்டுரை போட்டிகள் 10-ந்தேதி நடக்கிறது
- வள்ளலாரின் முப்பெரும் விழா கடந்த அக்டோபர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
- மேலும் தலைமை எழுத்தரை 73588 90203 என்ற எண்ணிலும், பிரிவு எழுத்தரை 7708944642 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வள்ளலாரின் முப்பெரும் விழா கடந்த அக்டோபர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா நாகர்கோவிலில் உள்ள பெருமாள் திருமண மண்டபத்தில் 18-12-2022 அன்று நடைபெற உள்ளது.
அதற்கு முன்னோடியாக குமரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, இசைப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி, ஓவியம் வரைதல் போட்டி ஆகியன நாகராஜா கோவில் மண்டபத்தில் வருகிற 10-ந்தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை அலுவலக நேரத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தலைமை எழுத்தரை 73588 90203 என்ற எண்ணிலும், பிரிவு எழுத்தரை 7708944642 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.