உள்ளூர் செய்திகள்

16 பெட்டிகளுடன் முதன் முதலாக படுக்கை வசதியுடன் அறிமுகமாகிறது வந்தே பாரத் ரெயில்

Published On 2024-10-07 05:03 GMT   |   Update On 2024-10-07 05:03 GMT
  • தூங்கும் வசதி படுக்கைகள் நவீன தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • டிசம்பர் அல்லது ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

சென்னை:

வந்தே பாரத் ரெயில் இருக்கை வசதியுடன் தற்போது இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூரு, மைசூரு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை-பெங்களூர், மதுரை-பெங்க ளூர் இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

சொகுசான வசதியுடன் பயண நேரம் குறைவதால் வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் எப்போதும் முழுமையாக நிரம்பி செல்கின்றன.

பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரெயில்களை படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. முற்றிலும் படுக்கை வசதியுடன் இந்த ரெயில் பெட்டிகள் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டது.


சென்னை ஐ.சி.எப். இதற்கான மாடலை தயாரித்து பெங்களூரில் உள்ள நிறுவனத்திடம் கொடுத்தது. ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளுக்கு தூங்கும் வசதி படுக்கைகள் நவீன தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

160 கி.மீ. வேகத்தில் சென்றாலும் பெட்டிகள் குலுங்காமல் இருக்கவும் விரைவாக கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில் விரைவில் பரிசோதனைக்கு விடப்படுகிறது.

சென்னையில் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

வந்தே பாரத் முதல் படுக்கை வசதி ரெயில் தயாரிப்பு பணிகள் முடிந்து ஐ.சி.எப். தொழிற்சாலைக்குள் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து ஏதாவது ஒரு நகருக்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். டிசம்பர் அல்லது ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

படுக்கை வசதி வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக எந்த நகருக்கு விடப் படும் என்பதை ரெயில்வே வாரியம் முடிவு செய்யும். சென்னையில் இயக்கப் படுமா? அல்லது வேறு நக ரங்களுக்கு ஒதுக்கப்படுமா? என்பது ஓரிரு மாதங்களில் தெரிய வரும் என்றனர்.

Tags:    

Similar News