உள்ளூர் செய்திகள் (District)

'வந்தே பாரத்' நாளை முதல் இருமார்க்கத்திலும் இயங்கும்:நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் புதிய கட்டிட நுழைவு வாயில் பகுதிக்கு வரவேண்டும்- அதிகாரிகள் தகவல்

Published On 2023-09-26 09:04 GMT   |   Update On 2023-09-26 09:04 GMT
  • சென்னையில் இருந்து பயணிகளுடன் இயக்கப்பட்ட ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது.
  • நெல்லை சந்திப்பில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.

நெல்லை:

நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

நாளை முதல் இருமார்க்கத்திலும் இயங்கும்

தொடக்க விழாவை யொட்டி சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது. நேற்று மதியம் சென்னையில் இருந்து நெல்லைக்கு பயணி களுடன் இயக்கப்பட்ட இந்த ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது.

செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் ரெயில் ஓடாது. அதன்படி இன்று இந்த ரெயில் இயக்கப்பட வில்லை. நாளை (புதன் கிழமை) முதல் இருமார்க் கத்திலும் இந்த ரெயில் சரியான கால அட்ட வணைப்படி இயங்குகிறது.

தீபாவளி முன்பதிவு

அதன்படி நெல்லை சந்திப்பில் இருந்து (வண்டி எண்- 20666) காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து (வண்டி எண்-20665) பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லையை இரவு 10.40 மணிக்கு வந்தடைகிறது.

இந்த ரெயிலுக்கான முன்பதிவு வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை முடிந்து விட்டது. பலர் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இது தவிர தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வருவதற்கு இப்போதே முன்பதிவு செய்து விட்டதால், இருக்கை கள் நிரம்பி விட்டன. இதன்படி பொங்கலுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் இருக்கை கள் அனைத்தும் நிரம்பி விட்டது.

அதேபோல் தீபாவளி, பொங்கல் விடுமுறை முடிந்து மறுநாள் நெல்லை யில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட்டு களும் விற்று தீர்ந்தன.

இந்த ரெயில் இன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய பிட்லைனில் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

புதிய நுழைவுவாயில்

நாளை முதல் இரு மார்க்கங்களிலும் இயக்கப் படும் நிலையில், காலை 6 மணிக்குள் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் ஏற வரும் போது புதிய நுழைவு வாயில் கட்டிடம் அருகே வருமாறு ரெயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புதிய நுழைவு வாயில் பகுதியில் வந்தே பாரத் எக்ஸ்பிரசின் கடைசி பெட்டி நிற்கும் என்பதால், கடைசி நேரத்தில் வரு வோரும், கடைசி பெட்டியில் ஏற வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் புதிய கட்டிட நுழைவு வாயில் பகுதிக்கு வந்து ஏறிச் செல்ல ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாளை, முதல் நாள் பயணம் என்பதால் ரெயில்வே போலீசார் அங்கு கூடுதலாக நிறுத்தப் பட்டு பயணிகளுக்கான சந்தேகங்களை தீர்க்கவும், அவர்களை பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

Tags:    

Similar News