வேதாரண்யம் நந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அனுமதி பெற்று நடத்த வேண்டும்
- கும்பாபிஷேகம் நடத்த கூடாது என திருப்பணி குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
- அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நாகை சாலையில் ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டபட்ட வேதாமிர்த ஏரி எனும் தீர்த்த குளம் உள்ளது.
இந்த ஏரியை 7.30 கோடியில் தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்க ப்பட்டுள்ளது. மேலும் ஏரியின் நடுவில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரு மான ஓ.எஸ்.மணியன் தன் சொந்த செலவில் தடாக ஸ்ரீ நந்திகேஸ்வரர் கோவில் அமைத்து தற்போது வரும் 4ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
நேற்று 2ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்க பட்டது. இந்த நிலையில் விழாவிற்கு வரும் பக்தா்களை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வை க்க கூடாது உடன் அகற்ற வேண்டுமென அறநிலை யத்துறை, நகராட்சி நிர்வாகத்தினர் தெரி வித்ததால் பிளக்ஸ்போ ர்டுகள் அகற்றபட்டன. நேற்று அறநிலை துறையினர் தாடகநந்தி ஸ்வார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி வாங்கவில்லை. எனவே கும்பாபிஷேகம் நடத்த கூடாது என திருப்பணி குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தனர்.
இதையொட்டி வேதாரண்யம் தாலுகா அலு வலகத்தில் பேச்சுவா ர்த்தை வருவாய் கோட்டா ட்சியர் பேபி தலைமையில் நடைபெற்றது பேச்சுவா ர்த்தையில் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் அறிவழக ன் டி.எஸ்.பி சுபாஷ் சந்திரபோஸ் நகராட்சி கமிஷ னரவெங்கட லெட்சுமணன் மற்றும்ச ட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், வழக்கறிஞர்கள் சுப்பையன் கிரிதரன் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொ ண்டனர். பேச்சு வார்த்தை க்கு பின்பு அனுமதி பெற்று கும்பா பிஷேகம்நடத்த வேண்டும் என தெரிவிக்க பட்டது இதனால் இன்று காலைஏரியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.