23 ஆண்டுகளுக்குப் பிறகு மோர்தானா சாலை அமைக்கும் பணி்
- கதிர்ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை கடந்த 2000 ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது அப்போது குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கூட்ரோட்டில் இருந்து மோர்தானா வரை சுமார் 8கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டது.
மோர்தானா சாலை
மோர்தானா சாலை பல இடங்களில் பழுதாகி இருந்ததனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர் மோர்தானா சாலையை சீரமைக்க வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து சைனகுண்டா கூட்ரோட்டில் இருந்து மோர்தானா கிராமம் வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்க திட்டம் தீட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மோர்தானா சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பூமி பூைஜ
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் தலைமை தாங்கினார்.ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கள்ளூர்ரவி, மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வராஜ், கவுரப்பன், மனோகரன், ரஞ்சித்குமார், அமுதாலிங்கம், தீபிகா பரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பாளராக வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீதாராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபத்மநாபன், தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர்கள் கே.தயாள மூர்த்தி, எம்.சத்தியமூர்த்தி வனச்சரக அலுவலர் வினோபா உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.