உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு அளிக்க வந்த காட்சி.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு

Published On 2023-01-04 09:37 GMT   |   Update On 2023-01-04 09:37 GMT
  • மணல் விலை குறைக்க வலியுறுத்தல்
  • மாட்டு வண்டிக்கு ரூ.800 நிர்ணயம்

வேலூர்:

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, அரும்பருத்தி கிராமத்தில் தமிழக அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.இங்கு அள்ளப்படும் மணல் வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் அரசு மணல் விற்பனை கிடங்கில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

அதன்படி ஒரு மாட்டு வண்டிக்கு மணல் விலை ரூ.800 வரிகள் உட்பட செலுத்த வேண்டும் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாட்டுவண்டி தொழிலா ளர்கள் மணல் அள்ள மாட்டு வண்டியுடன் குவாரிக்கு சென்றனர்.அப்போது ரூ.800 உயர்த்தப்பட்ட தொகை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்தத் தொகை அதிகமாக உள்ளதாக கூறி மாட்டுவண்டி தொழிலா ளர்கள் தெரிவித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து போலீசார் மணல் குவாரிக்கு சென்று மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.உயர்த்தப்பட்ட தொகையை ரூ.250 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News