பாலியல் அத்துமீறல் நடந்தால் தைரியமாக புகார் அளிக்கலாம்
- வேலூர் மாநகராட்சி கமிஷனர் பேச்சு
- முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
வேலுார்:
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இணைந்து, பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுப்பது மற்றும் முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந் தினராக, கமிஷனர் ரத்தின சாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
பணி புரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் நடக்கக் கூடாது.
அப்படி நடந்தால் எப்படி வெளிப்படுத்துவது என்ப தற்காகவும் இந்த கூட்டம் நடக்கிறது. அச்சப்பட வேண்டாம், அத்துமீறல்கள் இருந்தால் தைரியமாக புகார் அளிக்கலாம். சம்பந் தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, மாநகராட்சியில் தனியாக குழு அமைக்கப் படுகிறது.
நிரந்தர பணியாளர்கள் மட்டுமல்ல, ஒப்பந்தஅடிப் படையில் பணிபுரியும் பெண்களும் தங்களுக்கு ஏதாவது பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் இருந் தால் தைரியமாக புகார் அளிக்கலாம்.
இங்கு 50 சதவீதம் பேர் பெண்கள் தான், மேயரும் பெண் தான். இங்கு கூறப்படும் கருத்துக்களை கவனமாக கேட்டு, அதை நீங்கள் மற்ற வர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், சின்னத் திரை பிரபலம் ஜெயச்சந் திரன், பாலியல் துன்புறுத் தல் தடுப்பு சட்டம் 2013 குறித்து விளக்க உரையாற் றினார். பாலியல் தடுப்பு குறித்த உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
மாநகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக ஆலோசகர் விஜயலட்சுமி, பாதாள சாக்கடை திட்ட குழு தலைவர் தினகரன் மற்றும் மாநகராட்சி யில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொணடனர்.