உள்ளூர் செய்திகள்

மணல் குவாரியில் தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்ட காட்சி. 

மணல் குவாரியில் பொதுமக்கள் தர்ணா

Published On 2023-06-14 08:43 GMT   |   Update On 2023-06-14 08:43 GMT
  • டிராக்டர்களை சிறைபிடித்ததால் பரபரப்பு
  • போலீசார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்து சென்றனர்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், பொய்கை அடுத்த கந்தனேரியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு டிராக்டர் மூலம் தினமும் மணல் அள்ளப்படுகிறது.

மணல் குவாரி

மேலும் மணல் அள்ளும் போது குடியாத்தத்திற்கு செல்லும் கூட்டு குடிநீர் பைப் லைனும் உடைக்கப்பட்டது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் உடனடியாக மணல் குவாரியை நிறுத்த வேண்டுமென அந்த பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் ஆத்திர மடைந்த ஐதர்புரம் கிராம மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.

அங்கு மணல் அள்ளிக் கொண்டு இருந்த டிராக்டர்களை சிறை பிடித்து, மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் பாலாற்றில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் பேசினார். மேலும் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News