வரி பாக்கி செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்
- நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
- 100 சதவீத வருவாய் இலக்கினை அடைய பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது-
குடியாத்தம் நகராட்சியில் தீவிர வரி வசூல் நடைபெற்று வருகிறது. குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 10 கோடியே 17 லட்சத்தி 99 ஆயிரம் நிலுவையாக உள்ளது.
சொத்து வரி 3கோடியே 22 லட்சத்து 93 ஆயிரம், குடிநீர் கட்டணம் 2 கோடியே 88 லட்சத்து 25 ஆயிரம், குத்தகை இனங்களின் பாக்கி 2 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரம், தொழில் வரி 70 லட்சத்து 59 ஆயிரமும், இதர வரி இனங்களாக 90 லட்சமும் நிலுவையில் உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள சிரமமாக உள்ளதால் நிலுவைத் தொகை வைத்துள்ள நபர்கள் உடனடியாக நிலுவைத் தொகையை நகராட்சி அலுவலகத்தில் அல்லது வலைதளம் வாயிலாகவோ செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை கள் எடுக்கப்படும் எனவும் கடை வாடகை நிலுவை வைத்துள்ள நிலுவை தாரர்கள் உடனடியாக 7 தினங்களுக்குள் நிலுவைத் தொகையை அபரா தத்துடன் செலுத்தா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் மேலும் அதிக வரி பாக்கி நிலுவை வைத்துள்ள நபர்களின் பெயர் பட்டியல் நகரின் முக்கிய பகுதியில் விளம்பரப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே வரி நிலுவை வைத்துள்ளவர்கள் உரிய நேரத்தில் வரி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் நலன் கருதி விடுமுறை தினங்களில் நகராட்சி அலுவலக வரி வசூல் மையம் செயல்படுகிறது எனவும் குடியாத்தம் நகராட்சி 100 சதவீதம் வருவாய் இலக்கினை அடைய பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.