உள்ளூர் செய்திகள்
ஐம்பொன் சிலை

ஐம்பொன் சிலை கடத்தல்

Published On 2023-03-16 09:46 GMT   |   Update On 2023-03-16 09:50 GMT
  • கட்டை பையில் கருவேப்பிலைக்குள் பதுக்கி வைத்தனர்
  • வாலிபர்கள் 2 பேர் கைது

வேலூர்:

வேலூர் மாவட்டம் அரியூர் ஆவாரம் பாளையம் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது சந்தே கத்துக்கிடமாக பைக்கில் வந்தவர்களை மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் இருந்த கட்டைப் பையை சோதனை செய்தபோது அதில் காய்கறி எடுத்துச் செல்வது போல கருவேப்பிலைகளுக்கு இடையில் சிலை ஒன்று மறைத்து வைத்திருந்தனர்.அது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஐம்பொன்னால் ஆன 1 ½ அடி உயரமும், 5 ½ எடை கொண்ட அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிலையை கடத்தி வந்தவர்கள் திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (வயது 41), சோமாசிபாடி, புதுமை மாதா நகர், சர்ச் தெருவைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் (45) என்பது தெரியவந்தது.

இதில், வின்சென்ட் ராஜ் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். திருவண்ணாமலையில் பிரபாகரன் என்பவரது வீட்டில் எலெ க்ட்ரீஷியன் வேலைக்காக பள்ளம் தோண்டிய போது இந்த சிலை கிடைத்ததாக கூறியுள்ளார்.

அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ரூ.ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிவித்தனர்.

இதனை யடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கண்ணன், வின்சென்ட் ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையுடன் அவர்கள் வேலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் சிலையை வாங்க வந்தவர்கள் யார்?

அம்மன் சிலையின் மதிப்பு குறித்தும் அந்த சிலை எங்கு யாரால் திருடப்பட்டது என்றும் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Tags:    

Similar News