உள்ளூர் செய்திகள்

புதிய கால்நடை மருத்துவமனைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

தென்திருப்பேரையில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்

Published On 2023-06-07 08:54 GMT   |   Update On 2023-06-07 08:54 GMT
  • தென்திருப்பேரையில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனை பழுதடைந்த நிலையில் இருந்தது.
  • இதனால் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தென்திருப் பேரையில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவ மனை பழு தடைந்த நிலையில் இருந்தது. இதனால் புதிய கட்டிடம் கட்ட ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணா சலம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், தூத்துக்குடி மாவட்ட கால்நடை இணை இயக்குநர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) ஆண்டனி சுரேஷ், உதவி இயக்குனர் ஜோசப் ராஜ், கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், செந்தில் கண்ணன், பிரதீப், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், மத்திய ஒன்றிய அவை தலைவர் மகரபூசனம், தென்திருப்பேரை பேரூ ராட்சி தலைவர் மணிமே கலை ஆனந்த், செயல் அலுவலர் ரமேஷ் பாபு, துணை தலைவர் அமிர்த வள்ளி, நகர செயலாளர் முத்துவீர பெருமாள், கவுன்சி லர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், சீதா லட்சுமி, மாரியம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News