தெற்கு மயிலோடை கிராமத்தில் விஜயலட்சுமி கோவில் கொடை விழா முளைப்பாரி ஊர்வலம்
- கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் கொடை விழா தொடங்கியது.
- விழாவில் பால்குட ஊர்வலம், அக்னிசட்டி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தில் விஜயலட்சுமி, கசமாடசாமி, வைரவன், கருப்பசாமி, கழுமூர்த்தி கோவில் கொடை விழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினமும் முளைப்பாரி பாடல்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. கொடை விழா கடந்த இந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பால்குட ஊர்வலம், அக்னிசட்டி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. மேலும் விழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். கொடைவிழாவில் ஆடல், பாடல், வில்லிசை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் கோவிலில் பொங்கலிட்டும், கிடா வெட்டியும் நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் நாட்டாண்மை உடையார் பாண்டியன் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.