உள்ளூர் செய்திகள்

கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

நெல்லை அருகே கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

Published On 2023-01-26 09:30 GMT   |   Update On 2023-01-26 09:30 GMT
  • குடியரசு தினவிழாவையொட்டி இன்று பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
  • கங்கைகொண்டான் அருகே உள்ள அலவந்தான்குளம் கிராமத்தில் பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

நெல்லை:

குடியரசு தினவிழாவையொட்டி இன்று பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. கங்கைகொண்டான் அருகே உள்ள அலவந்தான்குளம் கிராமத்தில் பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிலையில் அலவந்தான்குளம் கிராம மக்கள் இன்று கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். அவர்கள் கிராமசபை கூட்டம் நடந்த பகுதி முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தை தனியார் நிறுவனங்களுக்காக சிப்காட் மூலம் அரசு கையகப்படுத்துவதாக தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிந்து நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். எனவே அதனை கைவிட வேண்டும் என தெரிவித்தனர்

Tags:    

Similar News