உள்ளூர் செய்திகள்

புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும்

Published On 2023-03-31 08:36 GMT   |   Update On 2023-03-31 08:36 GMT
  • புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
  • இந்த திட்டத்திற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம்

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைக்கூட்டத்தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் ராஜபாளையத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இடையில் செயல்பட்டு வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் கடந்த ஆட்சியாளர்களால் ராஜபா ளையம் தொகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்- கிருஷ்ணன்கோவில் அருகில் கொண்டு செல்லப்பட்டது,

இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற மிகவும் அவதிப்படுவதாக என்னிடம் பொது மக்களும், வாகன ஓட்டுநர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர், உடனடியாக நான் ராஜபாளையம் தொகுதிக்கு புதிதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்க வேண்டி முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்து தொடர்ந்து வலியுறுத்தியதின் பலனாக போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதிக்கு புதியதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியா கியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளி யாக நடவடிக்கை எடுத்த முதல்- அமைச்ச ருக்கும், போக்கு வரத்துத்துறை அமைச்ச ருக்கும், வருவாய்த்துறை அமைச்ச ருக்கும், தொழில் துறை அமைச்சருக்கும், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டிக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ராஜபா ளையம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்ப டுத்தி வருகிறார்.

அதில் சிறப்பு வாய்ந்த திட்டமான சாத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகத்துடன் செயல்பட்டு வந்த ராஜபா ளையம் வட்டத்தை மீண்டும் சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது.

ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் திட்டம், செயல்படுத்தப்பட்டு தற்போது டெண்டர் விட்டு பணி தொடங்கப்பட உள்ளது.

ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் முதல் சக்தி கண் மருத்துவமனை வரை இணைப்பு சாலை அமைக்கும் திட்டம்,செயல்படுத்தப்பட்டு இந்த திட்டத்திற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம் தொகுதிக்கு புதியதாக வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்கும் திட்டம் என மேற்கண்ட 4 சிறப்பு வாய்ந்த திட்டங்களை ராஜபாளையம் தொகுதிக்கு வழங்கிய முதல்-அமைச்சருக்கு ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும், பொதுமக்களும் உறுது ணையாக இருப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News