குப்பை கொட்டும் இடமாக மாறிய கோவில் அன்னதான கூடம்
- குப்பை கொட்டும் இடமாக கோவில் அன்னதான கூடம் மாறியது.
- கோவில் காம்பவுண்டு பகுதியில் குப்பை தொட்டியை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பூமிநாதன் கோவில் அமைந்துள்ளது.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
பூமிநாதன் கோவில் வளாகத்தில் அன்ன தான கூடம் உள்ளது. இதன் பின்புறமாக காம்பவுண்டு சுவர் அருகே குப்பை தொட்டி வைக்கப் பட்டுள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த குடியி ருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
மேலும் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டுவதால் நாள் கணக்கில் குப்பைகள் மலை போல் தேங்கும் அவலம் உள்ளது. எனவே கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் குப்பை ெதாட்டியை வைக்காமல் வேறுபகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், புகழ்பெற்ற இந்த கோவிலின் சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே கோவிலுக்கு அதிகமானோர் வருவார்கள். ஆனால் ஊராட்சி நிர்வாகம் கோவில் காம்பவுண்டு பகுதியில் குப்பை தொட்டியை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
இனிமேலாவது அதனை அகற்றி கோவில் சுற்று வட்டார பகுதியை தூய்மை யாக வைத்திருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.