- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
விருதுநகர்
விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஹாஜி பி.செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் உமர் பாரூக் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் சுப்பையா, ஜப்பார், துரைப்பாண்டி, சார்லஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
விழாவில் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படித்த நாங்கள் அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் துறை அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளோம். இந்த நிலைக்கு நாங்கள் உயர்ந்ததற்கு காரணம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த விதமும் காரணம் என்றனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வெங்கடேஷ், சவுந்தரராஜன், ராஜேஸ்வரன், முகம்மது நெய்னார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.