- அருப்புக்கோட்டையில் ஆவின் பாலகம் உணவகமாக மாறியது.
- அங்கு வேலை பார்ப்பவர்களில் சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உணவுகளை விற்று வருகின்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை சாலையில் ஆவின் பாலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பால் மற்றும் அதனை சார்ந்த பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட 2 ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களைத் தவிர உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வடை மற்றும் பூரி போன்ற உணவுகளை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
ஆனால் பாலகங்களில் பால் பொருட்கள் பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக அங்கு வேலை பார்ப்பவர்களில் சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உணவுகளை விற்று வருகின்றனர். இதனால் மேற்கண்ட 2 ஆவின் பாலகங்களும் நஷ்டத்சதை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆவின் பாலகங்களை உணவகமாக மாறிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.