வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு
- திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மாணவர்களிடம் கற்றல் திறன் பற்றி கேட்டறிந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சவ் வாசுபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.72 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புரணமைக் கப்பட்ட பணிகளை பார் வையிட்டு ஆய்வு செய்து பள்ளி மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்ட றிந்தார்.
மேலும் மதிய உணவு சமையல் கூடத்திற்கு சென்று பார்வையிட்டு, வழங்கப்பட்டு வரும் உண வின் தரம் குறித்தும், பதிவே டுகளையும் ஆய்வு செய்து, திட்டத்தின் மூலம் பயன்பெ றும் மாணவர்களின் எண் ணிக்கை குறித்தும் கேட்ட றிந்தார். பின்னர், சவ்வாசு புரத்தில் உள்ள பொது நூல கத்திற்கு சென்று பார்வை யிட்டு பதிவேடுகள், புத்தகங் களை ஆய்வு செய்து, வாசிப் பாளர்களிடம் நூலகத்தின் பயன்பாடு, தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந் தார்.
குள்ளம்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் ரூ.5.48 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட் டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தி னையும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.13.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ள உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டியினையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
முத்துராமலிங்கபுரம் அரசு துணை சுகாதார நிலையத்தில், மருந்துகளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், ம.ரெட்டியாபட்டி மேம்படுத் தப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு சென்று பிரசவ அறை, பிரசவத்திற்குபின் கவனிப்பு அறை, வழங்கப்படும் உணவு, சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவப்பிரிவு, மருந்துக ளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், மருந்துகள் மற்றும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தார்.