உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் வந்த ரைடர்ஸ் வாகன பேரணிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார்.

தி.மு.க. ரைடர்ஸ் வாகன பேரணிக்கு எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு

Published On 2023-11-20 05:14 GMT   |   Update On 2023-11-20 05:14 GMT
  • ராஜபாளையத்தில் தி.மு.க. ரைடர்ஸ் வாகன பேரணிக்கு எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • மாநில உரிமை மீட்புக்கான 2-வது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.

ராஜபாளையம்

தி.மு.க இளைஞர் அணி சார்பில் மாநில உரிமை மீட்புக்கான 2-வது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் விதமாக, கடந்த 15-ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை ரைடர்ஸ் வாகன பேரணியை இளைஞரணி செலயாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 188 இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

ராஜபாளையம் தொகு திக்கு வந்தடைந்த வாகன பேரணிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்எம்.குமார் முன்னிலையில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி சொக்க நாதன் புத்தூர் விலக்கில் பேர ணிக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ராஜபாளையம் வழியாக புதுப்பட்டி விலக்கு வரையில் சென்று இருசக்கர வாகனங்களை இயக்கி பேரணியை வழி அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணி கண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, இளங்கோவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News