பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சி
- பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சி நடந்தது.
- பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் உலக மண் தினத்தினை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று வழி கண்காட்சி நடைபெற்றது.
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி. குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் பிளாஸ்டிக் பொருட்களுக்கான பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அதற்கான மாற்றுப்பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில், ராஜபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்க ளுக்கான மாற்றுவழி கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறும்.இதில் சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு பதிலான மாற்று பொருட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சி முதன்முத லாக ராஜபாளையம் நகராட்சியில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சியிலும் நடத்தப்பட வேண்டும். திடக்கழிவு மேலாண்மை என்பது ஒரு சவாலான விஷயமாகும். அதனால் பொதுமக்கள் அதனை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்கி நகராட்சிக்கு உதவிட வேண்டும்.
மேலும் பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி, சுற்றுப்புறச்சூழலை காத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜ பாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா, நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, திருப்பூர் பாதுகாப்பு சங்கம் நிறுவன செயலாளர் வீரபத்மன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் காளி, பணியாளர்கள், பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.