உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க தலைக்கவசம் அணிய வேண்டும்

Published On 2022-12-03 08:50 GMT   |   Update On 2022-12-03 08:50 GMT
  • இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க தலைக்கவசம் அணிய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
  • காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், நடைபெற்றது. அப்போது அவர் ேபசியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துகளில், தலையில் அடிப்பட்டு அதனால் ஏற்படும் உயிழப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தலைக்கவசத்தின் பயன் குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும். மேற்படி விழிப்புணர்வினை அரசு அலுவலகங்களிலிருந்து அரசு அலுவலர்கள் மூலமாக முதற்கட்டமாக ஏற்படுத்த வேண்டும்.

அதன்படி, வருகிற 5-ந் தேதி அரசு அலுவலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் வருகிற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து, விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியும் விழிப்புணர்வினை படிப்படியாக பொது மக்களிடமும் கொண்டு சென்று, பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டுவதை ஊக்குவிக்க காவல்துறையினர் மூலமாக அறிவுறுத்த வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News