உள்ளூர் செய்திகள்

காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கலெக்டர் ஜெயசீலன்.

விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்

Published On 2023-10-11 08:05 GMT   |   Update On 2023-10-11 08:05 GMT
  • விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
  • அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 58-வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. இதில் அரசு மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவ னங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் தங்கி பயிலும் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் 37 பள்ளி மாணவ-மாணவி களை சந்தித்து கலெக்டர் ஜெயசீலன் உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கை யில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனு வங்களில் இருந்து கிடைக் கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.

வாழ்க்கையில் சாதிக்க கூடுதல் முயற்சி செய்ய 12-ம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றம் அடைய செய்யும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு மிகவும் எளிய வழி என்றால் அது படிப்பு மட்டுமே.

உயர்கல்வி எங்கு பயின் றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற் றிக்கு தேவையான விஷ யங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.

மேலும், ஒவ்வொரு வருக்கும் என்று தனித் திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News